×

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

The post முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ex ,minister ,Ponmudi ,Madras HC ,Chennai ,Chennai High Court ,Madras High Court ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…