×

ஆர்டிஓ அலுவலகங்களில் கார் டெஸ்டிற்கு புதுசா 145 கார் வருது

 

கோவை, டிச.22: தமிழ்நாட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கார் ஓட்ட லைசென்ஸ் பெற வருவோர் கார் இல்லாமல் தவிப்பதாக தெரிகிறது.  கார் டிரைவிங் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர், தங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலமாக கார் வாங்கி ஓட்டி காட்டி லைசென்ஸ் பெறுகின்றனர். இந்த சிரமம் தவிர்க்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் மூலமாக புதிதாக 145 கார்கள் பெறப்படவுள்ளன.

வரும் 26ம் தேதி முதல் இந்த புதிய கார்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். கோவை மண்டலத்தில் 11 ஆர்டிஓ அலுவலகம் மற்றும் 5 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மாருதி ஆல்டோ மாடலில் 16 கார்கள் ஒப்படைக்கப்படும். கார் வந்த பின்னர், லைசென்ஸ் வாங்க விரும்புவோர் எளிதாக கார் ஓட்டி காட்டி லைசென்ஸ் பெறலாம். கார் ஓட்ட 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

The post ஆர்டிஓ அலுவலகங்களில் கார் டெஸ்டிற்கு புதுசா 145 கார் வருது appeared first on Dinakaran.

Tags : RTO ,Coimbatore ,Tamil Nadu ,
× RELATED மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே...