×

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு கூடுதல் பஸ் விட வேண்டும்

திருக்காட்டுப்பள்ளி, டிச.22: திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.90 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்களும், பஸ்களும் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தஞ்சையிலிருந்து திருச்சி செல்ல வசதியாகவும், பயணதூரம் குறைவாகவும் உள்ளதால் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

ஆனால் பஸ் போக்குவரத்து என்பது பெயரளவில், அதுவும் ஒரே ஒரு பஸ் மட்டும் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு இயக்கப்படுவது வேதனை அளிக்கின்றது. இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட போக்குவரத்துதுறை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியும், கூடுதல் பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. திருச்சி செல்வதற்கு இந்த வழித்தடம் மிகவும் ஏதுவாக உள்ளதாகவும், ஆனால் பஸ் இல்லாததால் எப்பொழுதும் போல் கல்லணை சென்று கல்லணையில் இருந்து நடந்து சென்று பின் பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாகவும், பொது மக்களின் நலன் கருதி உடனடியாக கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், இப்பகுதி சுற்றுவட்டார மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு கூடுதல் பஸ் விட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli ,Chatram bus station ,Thirukkatupally ,Chatram bus station.… ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு