×

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நிவாரண பொருள் அனுப்பிவைப்பு

அரவக்குறிச்சி, டிச.22: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்ப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக பாதித்தப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பள்ளப்பட்டி பாப்புலர் அபுதாஹிர் தலைமையில் இணையதள பாப்புலர் அபுதாஹிர் தலைமையில் எக்ஸ்பிரஸ் குழுவின் நண்பர்கள் மூலம் நிவாரண பொருட்கல் சேகரிக்கப்பட்டு அரவக்குறிச்சி எஸ்ஐ திருநாவுக்கரசு மேற்பார்வையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி முதல்வர் இல்யாஸ், பள்ளப்பட்டி ஜமாத்துல் உலமா தலைவர் கலீல் ரஹ்மான், நகராட்சி வார்டு உறுப்பினர் முஸ்தாக், மற்றும் சமூக நல ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நிவாரண பொருள் அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Aravakurichi ,Pallapatti ,Thoothukudi ,
× RELATED கடும் வெயிலால் வறண்டு கிடந்த கொத்தப்பாளயம் தடுப்பணை நிரம்பி வழிகிறது