×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிறப்பு முகாமில் உள்ள 4 பேரை விடுதலை செய்க: பழ.நெடுமாறன்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு சிறை தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட முருகன் சிறப்பு முகாமில் உள்ளார். உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் 4 பேர் சிறப்பு முகாமில் தொடர்வது மனிதநேயத்துக்கு எதிரானது என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். முருகனும், அவரது மனைவி நளினியும் தங்களது மகள் வாழும் லண்டனுக்கு அனுப்பி வைக்குமாறு ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். முருகன், நளினியை லண்டன் அனுப்ப முடியாது என ஒன்றிய அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளதை கண்டிக்கிறேன். சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து 4 பேர் விரும்பும் நாடுகளுக்கு அனுப்பிவைக்க முதல்வர் உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

The post ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிறப்பு முகாமில் உள்ள 4 பேரை விடுதலை செய்க: பழ.நெடுமாறன் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi ,Pala.Nedumaran. ,Chennai ,Murugan ,Pala.Nedumaran ,
× RELATED 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை...