×

நடிகை மலைக்காவின் இடுப்பில் கை வைத்த ரசிகர்: பாதுகாவலரின் செயலால் அதிர்ச்சி


மும்பை: நடிகை மலைக்காவின் இடுப்பில் ரசிகர் ஒருவர் கை வைத்த நிலையில், அவரது பாதுகாவலர் அவரை அப்புறப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மாற்றுதிறனாளி ரசிகர் ஒருவர் மலைக்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். திடீரென அவர் மலைக்காவின் இடுப்பில் கை வைத்தார். பின்னால் நின்றிருந்த மலைக்காவின் பாதுகாவலர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பாதுகாவலர் உடனடியாக மலைக்காவின் இடுப்பில் கை வைத்திருந்த ரசிகரின் கையை அப்புறப்படுத்தினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர் இடுப்பில் கை வைத்திருக்கும் வீடியோவை எடுத்துவிட்டார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயனர்கள் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி ரசிகரிடம் மலைக்கா அன்பாக நடந்து கொண்டதாகவும், அதனால் அவர் அவரது இடுப்பை பிடித்த ரசிகரை கண்டு கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். அதேநேரம் பாதுகாவலரின் செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

The post நடிகை மலைக்காவின் இடுப்பில் கை வைத்த ரசிகர்: பாதுகாவலரின் செயலால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Malaika ,Mumbai ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்