×

வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பா?.. அமைச்சர் ரோஜா ஆவேசம்

திருமலை: வரும் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்று அமைச்சர் ேராஜா கூறினார். ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலன், கலாச்சார, பண்பாட்டு துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்றிரவு திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை கட்சியின் மேலிடமும், முதல்வர் ஜெகனும் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தற்போது பதவியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள், மக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவற்றின் சர்வே முடிவின் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளர்கள் வெற்றி பெறுவதுதான் எங்கள் இலக்கு. மக்கள் செல்வாக்கு குறைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர முடியாது என முதல்வர் ஜெகன் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் எனக்கு மீண்டும் போட்டியிட ஜெகன் வாய்ப்பு தர விரும்பவில்லை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். எனது தொகுதியில் நான் செய்த வளர்ச்சி பணிகள் அதிகளவு உள்ளது. தற்போதும் எனது தொகுதியில் இரவில் தங்கி மக்களோடு மக்களாக வளர்ச்சி பணிகளுக்காக செயல்படுகிறேன். ஆனால் சிலர் வேண்டுமென்ற எனக்கு வாய்ப்பு தர மாட்டார்கள் என வதந்தி கிளப்புகிறார்கள். ஆனால் கட்டாயம் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடுவேன். நகரி மட்டுமின்றி ஆந்திராவில் செல்வாக்கு மிக்க எந்த தொகுதி கொடுத்தாலும் வெற்றி பெறுவேன். இவ்வாறு அமைச்சர் ரோஜா கூறினார்.

The post வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பா?.. அமைச்சர் ரோஜா ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Roja Avesam ,Tirumala ,Yeraja ,
× RELATED சொந்த கட்சியிலே கடும் எதிர்ப்பு:...