×

திருச்செந்தூரில் சிக்கியுள்ள பக்தர்கள் வசதிக்காக நெல்லை, நாகர்கோவிலுக்கு கட்டணமின்றி பேருந்து சேவை தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சிக்கியுள்ள பக்தர்கள் வசதிக்காக இலவச பேருந்து சேவை தொடக்கபட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் வரலாறு காணாத பெருமழை பெய்தது.

பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து துண்டிக்கபட்டது. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற பக்த்தர்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். தற்போது மழை நின்று, வெள்ள நீர் வடிய தொடங்கிய நிலையில், வெள்ளத்தில் சிக்கி தவித்த பக்தர்கள் செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  தென்காசி  மாவட்டங்களுக்கு கட்டணமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

The post திருச்செந்தூரில் சிக்கியுள்ள பக்தர்கள் வசதிக்காக நெல்லை, நாகர்கோவிலுக்கு கட்டணமின்றி பேருந்து சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : TRUSCHENDUR ,NAGARGOV ,Tricendore ,Tricendur ,Transport Department ,Nagarkovo ,
× RELATED திருச்செந்தூரில் ஆர்டிஓ சுகுமாறன்...