×

வங்கதேசத்தில் ரயிலுக்கு தீ வைப்பு: 4 பேர் பலி

டாக்கா: வங்கதேசத்தில் வருகிற ஜனவரி 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதான எதிர்கட்சியான வங்கதேச நேஷனலிஸ்ட் கட்சி நேற்று நாடு தழுவிய அளவில் ரயில் நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

டாக்காவில் மோகன்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் ஏர்போர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் மர்மநபர்கள் சிலர் ரயிலின் 3 பெட்டிகளுக்கு தீ வைத்தனர். அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. தீயில் சிக்கிய பெண், அவரது மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

The post வங்கதேசத்தில் ரயிலுக்கு தீ வைப்பு: 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Dhaka ,Bangladesh ,Bangladesh Nationalist Party ,Dinakaran ,
× RELATED மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல்...