×

தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணை மீட்டார் அமைச்சர் எ.வ.வேலு..!!

தூத்துக்குடி: முத்தம்மாள் காலனியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணை அமைச்சர் எ.வ.வேலு மீட்டார். கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை ஜேசிபி இயந்திரம் மூலம் அமைச்சர் எ.வ.வேலு பத்திரமாக மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். கனமழை காரணமாக முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்பளவு தண்ணீரில் குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். முத்தம்மாள் காலனியில் அமைச்சர் எ.வ.வேலு நிவாரண பொருட்களை வழங்கினார். உணவு, குடிநீர் பாட்டில்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

The post தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணை மீட்டார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,A. V. Velu ,Thoothukudi ,Minister AV Velu ,Muthammal Colony ,AV Velu ,
× RELATED தூத்துக்குடியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்