×

தூத்துக்குடி, நெல்லையில் முழுவீச்சில் மீட்புப் பணி; 168 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லையில் முழுவீச்சில் மீட்புப் பணி; 168 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த அவர் கூறியதாவது,

2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம்

தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். பல தெருக்களில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் விநியோகம் சவாலாக உள்ளது.

168 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

168 ராணுவ வீரர்களும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்கப்படும் மக்களுக்கு தேவையான மருத்துவம் வழங்க மருத்துவ குழு தயாராக உள்ளது.

தூத்துக்குடி, நெல்லையில் முழுவீச்சில் மீட்புப் பணி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முழுவீச்சில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 275 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 275 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 97 முகாம்களில் 4192 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 26 முகாம்களில் 4506 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2 நாட்களில் 10,000 பேர் மீட்பு

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் 2 நாட்களில் 10,082 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். அண்டை மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருள்கள் வரவழைப்பு.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து 4 பயணிகள் மீட்பு

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி உட்பட 4 பயணிகள் மீட்பு. மீட்கப்பட்ட 4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் 1100 தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர்.

ஸ்ரீவைகுண்டத்தில் 500 ரயில் பயணிகள் உள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 25,000 உணவுப் பொருட்கள் விநியோகம். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. ரயில் நிலையத்தில் 300 பேரும் அருகில் உள்ள பள்ளியில் 200 பேரும் உள்ளனர்.

The post தூத்துக்குடி, நெல்லையில் முழுவீச்சில் மீட்புப் பணி; 168 ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்: தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tuthukudi, Nellai ,Chief Secretary ,Shivtas Meena ,Thoothukudi ,Thoothukudi, Nellai ,Toothukudi ,Nellai ,Muwich ,Mission ,Shivdas Meena ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...