×

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

பாடாலூர், டிச.18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சத்தில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் கலந்து கொண்டு குடிநீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் அந்த தொட்டி பற்றி விவரத்தை இரூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி ஆசைத்தம்பி, ஊரக வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் கேட்டிருந்தார். தொடர்ந்து நாரணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதிசந்திரன், வட்டார கல்வி அலுவலர் வினோத்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வஹிதாபானு, தலைமையாசிரியர் அல்லி, பள்ளி ஆசிரியர்கள் இலக்குவன், ஜீவிதா, அமுதா, சரளா, ஜோதிகண்ணன், பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பார்வதி, மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : BATALUR ,PERAMBALUR DISTRICT ,ALATHUR TALUKA RUR VILLAGE ,PERAMBALUR M. ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...