×

தென்மாவட்டங்களில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது: காயல்பட்டினத்தில் 95 சென்டி மீட்டர் பதிவு


சென்னை: தென்மாவட்டங்களில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. ஒரே நாளில் காயல்பட்டினத்தில் 95 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி, குளம், ஆறு, அணைகளில் இருந்து வெளியேறும் மழைநீரால் தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்துள்ள இந்த கனமழை 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது வரை மழை வரலாற்றில் அதிகப்பட்சமாக அவலாஞ்சியில் 92 செ.மீ. பெய்த மழை தான் அதிகபட்சம் என்று இருந்தது. ஆனால், தற்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 95 சென்டி மீட்டர் மழை பெய்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 69 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிக்ஜாம் புயல், கனமழையின் போது சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருந்தது. சராசரியாக 50 சென்டி மீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

The post தென்மாவட்டங்களில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது: காயல்பட்டினத்தில் 95 சென்டி மீட்டர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Southern ,Kayalpattinam ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...