×

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி

பெரம்பலூர்,டிச.17: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமை யில் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும், மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில், பெண் போலீசாருக்கு புரிந்துணர்வு சுற்றுலா, கலந்துரை யாடிப்பேச “காப்பி வித் கான்ஸ்டெபிள்”, மலையே ற்றப் பயிற்சி, பொதுமக்களுடன் இணைந்து பழக “ஹேப்பீ ஸ்ட்ரீட்”, பயணிகள் அச்சமின்றி பயணிக்க பாதுகாப்புப் பயணம் போன்றத் திட்டங்களை செயல்படுத்தி ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் மனதிற்கும் உடலுக்கும் ஒருசேர புத்துணர்ச்சி அளிப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் நேற்று (16ம்தேதி) பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்ப் பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு “யோகா” பயிற்சிகள் வழங்கப்பட்டது .இந்தப்பயிற்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா பயிற்சி அவசியமாகும். யோகா பயிற்சியின் மூலம் தன்னம்பிக்கை சுய கட்டுப்பாட்டை வளர்க்க முடியும். நீண்ட ஆயுளைபெற உதவியாக இருக்கும். ஞாபக சக்தியை பெருக்க முடியும்.

இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மன இறுக்கத்தை குறைத்து கட்டுப்பாட்டுக்குள்வைக்க யோகாபயிற்சி மிகவும் அவசியமானது என்றார். யோகா பயிற்சியில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி(தலைமையிடம்) மதியழகன் கலந்து கொண்டு யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து போலீசாருக்கு எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் சப். இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப் படையைச்சேர்ந்த ஏட்டுகள், போலீசார், பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையை சார்ந்த யோகா பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Perambalur District Armed ,Forces ,Perambalur ,SP ,Shyamla Devi ,Perambalur district ,Dinakaran ,
× RELATED பலே திருடன் பதுக்கிய ₹8 லட்சம் மதிப்பு...