×

பைன் பாரஸ்ட் சுற்றுலா தலத்தை காண குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி,டிச.17: ஊட்டி அருகே உள்ள பைன் பாரஸ்ட் சுற்றுலா தளங்களில் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் நாள்தோறும் குவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.அண்டை மாநிலமான கர்நாடகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வழக்கமான சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்காமல் இயற்கை எழில் கொஞ்சம் பகுதியிலே கண்டு ரசிக்கவே ஆரம்பம் அதிகம் காட்டுகின்றனர்.

வனங்கள் மற்றும் வனவிலங்குகள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டு ரசிக்கவும் அணைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பகுதிகளை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலை குந்தா அருகே பைன் பாரஸ்ட் சுற்றுலா தளம் உள்ளது. இங்கு ஏராளமான பைன் மரங்களுக்கு இடையே அழகிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் வழியாக சென்றால் காமராஜ் சாகர் அணை அடையளாம்.இந்த அழகை காண்பதற்காக கூடலூர் வழியாக ஊட்டி வரும் கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் இந்த பைன் பாரஸ்ட் பகுதியில் குவிக்கின்றனர். மேலும் இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post பைன் பாரஸ்ட் சுற்றுலா தலத்தை காண குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Pine Forest ,Ooty ,Kerala ,Karnataka ,Dinakaran ,
× RELATED சமவெளியிலும் குறைந்த ஏக்கரில் நிறைவான மகசூல் தரும் மிளகு!