×

ஊடக துறையில் கை ஓங்குகிறது; ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகள் வாங்கிய அதானி

புதுடெல்லி: கடந்த 1988ம் ஆண்டு சரக்கு வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி, தற்போது 13 துறைமுகங்கள், 8 விமான நிலையங்களை கைப்பற்றி நாட்டின் நம்பர்-2 பணக்காரராக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச்சில் அதானி குழுமம், வர்த்தகம் மற்றும் நிதி செய்திகளை வெளியிடும் டிஜிட்டல் மீடியா தளமான பிக்யூ பிரைம் சேனலை நடத்திய குயின்டில்லியன் பிசினஸ் மீடியா நிறுவனத்தை வாங்கி, ஊடக துறையில் களமிறங்கியது.

அதைத் தொடர்ந்து டிசம்பரில் என்டிடிவி சேனலின் 65 சதவீத பங்குகளை கைப்பற்றியது. தற்போது அடுத்ததாக ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் 50.5 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. அதானி குழுமம் கைப்பற்றி உள்ள 3வது மீடியா நிறுவமான ஐஏஎன்எஸ், கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.11.86 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

The post ஊடக துறையில் கை ஓங்குகிறது; ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகள் வாங்கிய அதானி appeared first on Dinakaran.

Tags : Adani ,IANS ,New Delhi ,Gautam Adani ,Gujarat ,Dinakaran ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்