×

அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்

புதுடெல்லி: அதானி துறைமுகத்துக்கு எதிராக போராடியதால் கேரளாவை சேர்ந்த லத்தின் கிறிஸ்தவ சபையின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சித்தில் அதானி நிறுவனம் சர்வதேச துறைமுகம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த துறைமுக கட்டுமான பணிகள் நடந்தபோது அதற்கு எதிராக கடந்த 2022ல் பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டத்துக்கு லத்தின் கிறிஸ்தவ சபையும் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, அந்த சபையின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தற்போது அம்பலமாகி உள்ளது. இது குறித்து கேரளாவில் உள்ள லத்தின் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்றுமுன்தினம் பிரார்த்தனையின்போது கடிதம் ஒன்று வாசிக்கப்பட்டது. அதில், அதானி துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சபையின் வங்கி கணக்குகள் 2022ல் முடக்கப்பட்டதாகவும், இன்று வரை அந்த முடக்கத்தை ஒன்றிய அரசு நீக்க மறுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் லத்தின் சபையை சேர்ந்த 10 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

The post அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Christian ,Adani ,NEW DELHI ,Kerala ,Vilinjit ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...