×

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய்: தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் வருடாந்திர மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடியாக இருந்தது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறையான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையால் வருமானம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்தது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கப்பட்ட முதல் 28 நாள்களில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வருமானம் ரூ.20 கோடிக்கு மேல் குறைந்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிராசந்த் கூறுவையில், கடந்த ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் ரூ. 154.77 கோடியாக இருந்த வருமானம் இந்த ஆண்டு ரூ.134.44 கோடியாக குறைந்து உள்ளது.

சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையே வருமானம் குறைவுக்கு காரணம் இருந்துள்ளது. நடைப்பயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 18.16 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த முறை இதே கால கட்டத்தில் 18.88 லட்சமாக இருந்தது. அதிகபட்சமாக டிசம்பர் 8 ஆம் தேதி 88,744 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். சென்னை வெள்ளம் மற்றும் தெலங்கானாவில் சட்டப் பேரவைத்தேர்தல் காரணமாக முதல் இரண்டு வாரங்களில் எதிர்பார்த்ததை விட குறைவான அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்து வந்துள்ளது. சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறையான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையால் வருமானம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய்: தேவசம்போர்டு appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan temple ,Devasambord ,Thiruvananthapuram ,Devasam Board ,Annual Mandal ,Sabarimala ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு