×

கோவையில் 18ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா

 

கோவை, டிச.16: மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா வரும் 18ம் தேதி கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர்.

இவ்விழாவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவர் கலைமாமணி, டாக்டர். இறையன்பன் குத்தூஸ், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் பீட்டர் ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் சம்பத், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

விழாவில் நிர்மலா கல்லூரி மாணவியரின் கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விரைவில் முடிக்க திட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு பள்ளிகள், கல்லுாரிகள், பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தேவைப்படும் பட்சத்தில் புதியதாக வேகத்தடை அமைக்கப்படும். அதன் மீது உடனடியாக பெயிண்ட் அடிக்க முடியாது. அதிகபட்சம் மூன்று நாட்கள் ஆனால்தான் அதன் மீது வெள்ளை பெயிண்டால் குறியீடு அமைக்கப்படும்.

The post கோவையில் 18ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா appeared first on Dinakaran.

Tags : 18th Minority Rights Day ,Coimbatore ,Minority Rights Day ,State Minority Commission ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்