×

ஆலந்தூர் 12வது மண்டலத்தில் 6 வார்டுகளில் 9000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட 156, 157, 158, 159, 160, 161 ஆகிய 6 வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 9000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை, பெட்ஷீட் உள்பட பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை அந்தந்த வார்டுகளில் நடைபெற்றது. அதன்படி, 160வது வார்டு சார்பில் தர்மராஜா கோயில் தெருவில் நடந்த நிவாரண நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், பகுதி செயலாளர் பி.குணாளன், வட்ட செயலாளர் கே.பி.முரளிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பெட்ஷீட் உள்பட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பகுதி நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், மீன் மோகன், எம்.வி.குமார். ஸ்ரீதர், வி.ராஜா, சாகிம்சா, கீர்த்திராஜ், கலாநிதி குணாளன், காமராஜ், பூவராகவன், கோபி, ரவின்குமார், ஹார்பர் குமார், எம்டிசி ராஜ், தீனன், காஜாமொய்தீன், விக்கி, உதயா, பாரூக், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் 156வது வார்டில் கவுன்சிலர் செல்வேந்திரன், 157வது வார்டில் வட்ட செயலாளர் ரவி, 158வது வார்டில் கவுன்சிலர் பாரதி குமரா, 161வது வார்டில் கவுன்சிலர் ரேணுகா சீனிவாசன் ஆகியோர் தலைமையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 7500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பெட்ஷீட் உள்பட பல்வேறு நிவாரண உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில் எம்.ஜி.கருணாநிதி, செய்யது அபுதாஹீர், ஆதம் லட்சுமிபதி, அழகேசன், கோட்டீஸ்வரன், சத்யா, வெங்கடேஷ். முனுசாமி, ஆன்ட்ரூஸ், முனியாண்டி, சக்ரவர்த்தி, சச்சீஸ்வரி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

The post ஆலந்தூர் 12வது மண்டலத்தில் 6 வார்டுகளில் 9000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Alandur 12th Zone ,Minister ,Th.Mo.Anparasan ,Alandur ,Chennai Corporation ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி