×

22 நாட்களுக்கு பின் ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 22ம் தேதி பெய்த கனமழை, மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை 13ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. 22 நாட்களுக்கு பிறகு நேற்று மலை ரயில் சேவை துவங்கியது. முன்பதிவு செய்த 184 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக, சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

The post 22 நாட்களுக்கு பின் ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : MTUPPALAYAM ,METUPPALAYAM ,OOTY ,Ooty Mountain Train ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து!