×

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு வரவேற்பு: ம.பி. புதிய முதல்வர் தகவல்

போபால்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், ‘‘மத்தியப்பிரதேசத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக அயோத்தி வருவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் நெற்றியில் திலகம் பூசி வரவேற்கப்படுவார்கள். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயிலை காண வரும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

The post ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு வரவேற்பு: ம.பி. புதிய முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ram Temple Kumbabhishekam ,M.B. ,Bhopal ,Ram temple ,Ayodhya, Uttar Pradesh ,Chief Minister ,
× RELATED கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக...