×

கோவா விமான நிலையத்தில் இந்தியை கற்கக் கூறி தமிழ் பெண் அவமதிப்பு: பரபரப்பு தகவல்

கோவா: கோவா விமான நிலையத்தில் இந்தியை கற்கக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் அவமதிக்கப்பட்டார். விமான நிலைய பாதுகாவலர்களால் இந்தி கற்கும்படி மிரட்டப்பட்ட சர்மிளா ராஜசேகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கூட வற்புறுத்தி திணிப்பதால் போய் விட்டது. இந்தி தேசிய மொழி என்று கூறி விமான நிலைய பாதுகாவலர்கள் மிரட்டியதாக குற்றச்சாட்டியுள்ளார். இந்தி அலுவல் மொழி மட்டுமே என்று தான் விளக்கம் அளித்தபோதும் சி.ஐ.னஸ்.எஃப். வீரர்கள் ஏற்க மறுத்து மிரட்டினர். எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிரட்டல் குறித்து புகார் அளித்தேன் என்று அவர் கூறினார்.

The post கோவா விமான நிலையத்தில் இந்தியை கற்கக் கூறி தமிழ் பெண் அவமதிப்பு: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Goa airport ,Goa ,Tamil Nadu ,
× RELATED யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு...