×

சத்தீஸ்கர் முதலமைச்சராக பதவியேற்றார் விஷ்ணு தேவ் சாய்!

ரராய்பூர்: சத்தீஸ்கர் முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு தியோ சாய், இன்று பதவியேற்றார். மாநில தலைநகரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

59 வயதான விஷ்ணு தியோ சாய், பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) முதல் பழங்குடியின முதல்வர் ஆவார். அவருடன், 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கருக்கு முதல்வர் உட்பட அதிகபட்சமாக 13 அமைச்சர்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்றி கேபினட் அமைச்சர்களும் பதவியேற்ற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜகவின் சத்தீஸ்கர் பொறுப்பாளர் ஓம் மாத்தூர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த சம்பிரதாயப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

 

 

 

The post சத்தீஸ்கர் முதலமைச்சராக பதவியேற்றார் விஷ்ணு தேவ் சாய்! appeared first on Dinakaran.

Tags : Vishnu Dev Sai ,Chief Minister ,Chhattisgarh ,Raraipur ,Vishnu Deo Sai ,
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!