×

வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த 10 அடி நீள புடலங்காய்

 

பரமக்குடி, டிச. 13: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உலகநாதபுரத்தில் வசித்து வருபவர் அருள்மணி. இவர் தனது சொந்த கிராமத்தில் சுமார் ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி செடிகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் புடலங்காய் பந்தல் அமைத்து புடலங்காய் கொடிகளை வளர்த்து வந்துள்ளார்.

சாதாரணமாக வளர்ந்த புடலங்காய் கொடிகளில் 6 அடி முதல் 10 அடி வரை வளர்ந்து நூற்றுக்கணக்கான காய்கள் காய்த்து தொங்குகின்றன. இவற்றைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவர், தோட்டத்தில் வளர்ந்த புடலங்காய்களை அப்பகுதி மக்களிடையே இலவசமாக வழங்கி வருகிறார். இவரது தோட்டதைச் சுற்றுப்பகுதியில் உள்ள பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

The post வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த 10 அடி நீள புடலங்காய் appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Arulmani ,Ulganathapuram ,Paramakkudy ,Ramanathapuram district ,
× RELATED ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில்...