×

குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

காட்டுமன்னார்கோவில், டிச. 13: காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி பகுதியில் உள்ள அப்துல் ரவூப் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததின்பேரில், கடலூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென கடைகளில் சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவின்பேரில், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் ஆகியோர் தலைமையில் காட்டுமன்னார்கோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை காவலர் முருகவேல் ஆகியோர் முன்னிலையில் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுபோன்று கண்டமங்கலம் கிராமத்தில் கருணானந்தன் என்பவரது கடைக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள் விற்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

The post குட்கா விற்ற 2 கடைகளுக்கு சீல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Tamil Nadu ,Abdul Raoob ,Elleri ,Kattumannarko ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!