×

மழை பொழிவது நின்றதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 600 கன அடியாக குறைப்பு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: மழை பொழிவது நின்றதால், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறப்பு 600கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்னை புறநகர் பகுதிகளில் மழை விட்டதுடன், தற்போது நன்றாக வெளிலும் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக குறைய தொடங்கியது. அந்த வகையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.59 அடி தண்ணீர் உள்ளது. அதேபோன்று மொத்த தண்ணீர் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், தற்போது 3271 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.

மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 622 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தற்போது 622 கன அடி உபரிநீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன்மூலம், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்படும் என்று ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

The post மழை பொழிவது நின்றதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 600 கன அடியாக குறைப்பு: பொதுப்பணித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,PWD ,CHENNAI ,Sembarambakkam lake ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு...