×

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழிசை, எல்.முருகன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை: தனது வெற்றிகரமான திரையுலக பயணத்தோடு,தூய ஆன்மிக பயணத்தையும் அரவணைத்து, உலகளவில் மூன்று தலைமுறை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை துவங்கி பத்மபூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதாசாகிப் பால்கே என பல விருதுகளைப் பெற்று, நம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது கலையுலகப் பயணம் இன்னும் பல உயரங்களை அடையவும்- நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள். தயாநிதி மாறன் எம்பி: இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய நல்வாழ்த்துகள். பாமக தலைவர் அன்புமணி: அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

The post நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Chennai ,Tamilisai ,L. Murugan ,Udayanidhi Stalin ,Dayanithimaran ,Telangana ,Puducherry ,Governor ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...