×

சுகவனேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேக பூஜை

 

சேலம், டிச.12: கார்த்திகை மாத கடைசி சோம வாரத்ைதயொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமியின் அருளை பெற்றனர். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகளில் முருகன், சிவன், அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். நேற்று கார்த்திகை கடைசி சோம வாரத்தையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நேற்று காலை சிவன், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு ஹோமமும், 1008 சங்காபிஷேகம் விழா நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியசுவாமி கோயில், பேர்லண்ட்ஸ் முருகன் கோயில், அடிவாரம் ஆறுபடை முருகன் கோயில், ஊத்துமலை முருகன் கோயில், கந்தாஸ்ரமம் முருகன் கோயில், குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் சிவன், அம்மன், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது.

The post சுகவனேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேக பூஜை appeared first on Dinakaran.

Tags : Sangabhishek Puja ,Sukhavaneswarar Temple ,Salem ,sangabhishekam ,Salem Sukhavaneswarar temple ,Sangabhishek Pooja ,
× RELATED பூஜை முடிவதற்குள் மின்விளக்குகள் நிறுத்தம்