×

பாரதியார் பிறந்த நாள் தமிழுக்கும், விடுதலை போராட்டத்துக்கும் ஆற்றிய பணிகளை வணங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: பாரதியார் பிறந்த நாளையொட்டி, தமிழுக்கும், விடுதலை போராட்டத்துக்கும் அவர் ஆற்றிய பணிகளை வணங்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!’ எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்தியவர் மகாகவி பாரதியார். இன்று அவரது பிறந்தநாளில், அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம். வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாரதியார் பிறந்த நாள் தமிழுக்கும், விடுதலை போராட்டத்துக்கும் ஆற்றிய பணிகளை வணங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Bharatiyar ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...