×

தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளை ஆஜர்படுத்த வேண்டும்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகம் விடுத்துள்ள அறிக்கையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இருவரை வருகின்ற ஜனவரி மாதம் 11ம் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்(29). இவர், மேற்படி வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு நீண்ட காலமாக ஆஜராகமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே, அம்பத்தூர் சார்வு அமர்வு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி. ஜெயபால் என்பவரை வருகின்ற 11.1.2024ம் தேதி அன்று சார்வு அமர்வு நீதிமன்றம் அம்பத்தூர் நீதிபதி முன் ஆஜப்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தால் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆவடியை அடுத்து ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்தவர் மணி(22). இவருக்கும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு நீண்ட காலமாக ஆஜராகமல் தலைமறைவு குற்றவாளியாக இருந்து வந்தார். எனவே, அம்பத்தூர் சார்வு அமர்வு நீதிமன்றத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில், மணி, என்பவரை வருகின்ற 11.1.2024ம் தேதிக்குள் சார்பு அமர்வு நீதிமன்றம் அம்பத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என இவ்வாறு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

The post தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளை ஆஜர்படுத்த வேண்டும்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Aavadi Police Commissionerate ,Dinakaran ,
× RELATED அபார்ட்மெண்ட் கட்டி தருவதாக கூறி போலி...