×

ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்: எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரா: ஆந்திர மாநிலம் வி.கோட்டா மண்டலத்தில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மூன்று எல்லைகள் ஒன்றாக சேரக்கூடிய பகுதியாகும். நேற்று இரவு கர்நாடகா மாநில எல்லையில் இருந்து ஆந்திரா நோக்கி குப்பம் பகுதியில் 70 யானைகள் கூட்டம் வந்ததாக கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆந்திரா போலீசார் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து இரவு நேரத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் யாரும் தனியாக செல்ல வேண்டாம் என்றும் மாலை கடந்த பின்பு அவரவர் வீட்டிலே இருக்க வேண்டும் என அப்பகுதி மக்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் எச்சரித்தனர். இந்நிலையில் எந்த நேரத்தில் யானைகள் கூட்டம் தங்கள் விவசாய நிலங்களுக்கு வந்து சேதப்படுத்துமோ, தங்களை தாக்குமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

கடந்த 1 வாரமாக வி.கோட்டா மண்டலத்தில் உள்ள 13 கிராமங்களில் 13 யானை கூட்டங்கள் அப்பகுதியில் சுற்றி வரக்கூடிய நிலையில் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் இதனால் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து பயிரிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் யானைகளால் அழிக்கப்படுவதாகவும் இதற்கு தீர்வு காணவேண்டும் என்றும் கிராமமக்கள் கேட்டுக்கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் சமந்தபட்ட யானைகளை தங்கள் பகுதிகளுக்கு வராமல் மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

The post ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்: எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Andhra ,Karnataka ,Tamil Nadu ,V. Kota ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்