×

ஆண்டவன் நினைத்தால் பாஜவுடன் கூட்டணி: சரத்குமார் பேட்டி

நெல்லை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு நேற்று சென்று பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் உயர்மட்டக்குழு இன்னும் 15 நாட்களுக்கு பிறகு கூடி முடிவெடுக்கும். பா.ஜ.வோடு இணைவதற்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இறைவன் என்ன நினைக்கிறானோ, அது நடக்கும். தென் மாவட்டங்களில் சமக நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன.

நாங்கள் போட்டியிடும் தொகுதி நெல்லை தொகுதியாக கூட இருக்கலாம். எங்களது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான். அதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தொகுதிக்குள் சென்று அவர்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளேன். அந்தந்த தொகுதிக்கான தேவைகள் என்ன, அடிப்படை வசதிகள் என்ன என்பதை 30 நாட்களுக்குள் தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post ஆண்டவன் நினைத்தால் பாஜவுடன் கூட்டணி: சரத்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,God ,Sarathkumar ,Nellai ,People's Party ,Nellaipar temple ,Swami ,
× RELATED தண்ணீர்… தண்ணீர்…