×

காரியாபட்டி அரசு பள்ளியில் பனைமரம் வளர்ப்பு விழிப்புணர்வு

காரியாபட்டி, டிச.9: காரியாபட்டி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி அரசு மேனிலை பள்ளியில் பனை மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் சந்தான கிருஷ்ணன், கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் ஆகியோர் பனைமரங்களின் பயன்பாடுகள் பனை மரத்தில் கிடைக்கும் உணவு பொருட்களின் தன்மை, பனைமரங்கள் நடுவதன் அவசியம் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் பெரியசாமி, ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி ஆசிரியர் பொன்ராம் கூறுகையில், காரியாபட்டி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தோடு இணைந்து கிராமங்கள் தோறும் பனை விதைகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றோம். இன்னும் 2 மாத காலத்திற்குள் 10 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றோம். அழிந்துவரும் தமிழக பாரம்பரிய பனைமரங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம் என்றார்.

The post காரியாபட்டி அரசு பள்ளியில் பனைமரம் வளர்ப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kariyapatti Government School ,Kariyapatti ,Union S. Kallupatti Govt. Menilai School ,
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் இடியும்...