×

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்: கலெக்டர் ஆய்வு

 

கோவை, டிச. 9: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோரிடம் அக்குழந்தைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், அரசு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

முகாமில், எலும்பு மூட்டு மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் உள்ளிட்ட வயது வரம்பு தளர்வு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதில், 83 மாற்றுத்திறனாளி குழந்தைகள், மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்குவதற்கான வயது வரம்பு தளர்வு குழு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : COVE ,Goa District Collector's Office ,Medical Camp for ,Children ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்