திருமலை: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் நடந்த தேர்தலில் அவரது கட்சி ஆட்சியை இழந்த நிலையில் அவர் யாரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார். கஜ்வேலில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குளியலறையில் அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.