×

நிலதரகர்களுக்கு அங்கீகாரம்: முதல்வருக்கு கோரிக்கை

திருப்பூர்: இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் 20ம் ஆண்டு விழா திருப்பூரில் நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். தரகர்கள் நலச்சங்க மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணி, பில்டர்ஸ் மாநில அமைப்பாளர் ஜி.வி.என்.குமார், ரியல் எஸ்டேட் மாநில அமைப்பாளர் செல்வம், லேண்ட் டெவ லப்பர்ஸ் மாநில அமைப்பாளர் ராமகிருஷ்ணன், கட்டுமான அமைப்புசாரா சங்க தலைவர் எழில் சம்பத், வக்கீல் அணி மாநில அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில அமைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய செயலாளர் செந்தில்குமார், அகில இந்திய பொருளாளர் சரவணன், அகில இந்திய துணைத்தலைவர் அன்னை சரவணன், அகில இந்திய துணை செயலாளர் சரவணன் ஆகியோர் சங்க கொடி ஏற்றி வைத்தனர். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான விருகை ரவி, திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார், அதிமுக ஓட்டுனரணி கமலக்கண்ணன், தனபால், கிள்ளி வளவன், ஸ்ரீதர் ராமச்சந்திரன், திருமுருகன், பூண்டி நகராட்சி தலைவர் குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

விருகை வி.என்.கண்ணன் பேசுகையில், ‘இந்த சங்கம் தொடங்கப்பட்டு 20 ஆண்டு ஆகிறது. 20 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு, ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றவர்களுக்கு நிறைய செய்துள்ளோம். அரசாங்கம் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளது. கூலி நிலத்தரகர்களுக்கு நிறைய உதவிகளை போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுத்துள்ளோம். கூலி நில தரகர்களுக்கு நிலத்தை விற்றுகொடுக்கும்போதும், வாங்கி கொடுக்கும்போதும் முறையாக கமிஷன் தருவது கிடையாது. அவர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில் போலீசில் புகார் கொடுத்தால் ஏற்பதில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார். எங்கள் துறையில் உள்ள பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் மனுவாக கொடுத்துள்ளோம். பிரச்னைகளை உடனடியாக தீர்த்துகொடுக்கிறார். இதுபோல் நிலதரகர்களுக்கு அங்கீகாரம் பெற்றுகொடுக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’என்றார்.

The post நிலதரகர்களுக்கு அங்கீகாரம்: முதல்வருக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Tirupur ,Indian National Real Estate Builders Land Developers Welfare Association ,Tirupur.… ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...