சென்னை :மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர் : செல்வப் பெருந்தகை appeared first on Dinakaran.
