×

சென்னைக்கு போக்குவரத்து சீரானதால் களைகட்டிய ஆண்டிபட்டி சந்தை: போட்டி போட்டு காய்கறிகளை ஏலம் எடுத்த வியாபாரிகள்

தேனி: சென்னைக்கு போக்குவரத்து சீரானதை தொடர்ந்து ஆண்டிபட்டி சந்தையில் இருந்து ஏராளமான சரக்கு வாகனங்களில் காய்கறிகள் அனுப்பப்பட்டன. ஆண்டிபட்டி யானை மார்க்கெட்டில் இருந்து சென்னை, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மிகஜாம் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னைக்கு போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

தற்போது போக்குவரத்து சீரானதை அடுத்து வழக்கம்போல ஆண்டிபட்டி யானை மார்க்கெட் கமிஷன் கடைகளில் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு காய்கறிகளை ஏலத்தில் எடுத்தனர். தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய் என அனைத்து விதமான காய்கறிகளும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகமாக ஏலம் போனது. ஏலத்தில் எடுக்கப்பட்ட காய்கறிகள் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காய்கறிகளை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் குவிந்ததால் ஆண்டிபட்டி யானை மார்க்கெட் பரபரப்பாக காணப்பட்டது.

 

The post சென்னைக்கு போக்குவரத்து சீரானதால் களைகட்டிய ஆண்டிபட்டி சந்தை: போட்டி போட்டு காய்கறிகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Antipatti market ,Chennai ,Theni ,Andipatti market ,Andipatti ,Dinakaran ,
× RELATED பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்