×

ஊர்காவல்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்

பெரம்பலூர், டிச.8: பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாமை எஸ்பி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 8 பெண்கள் உள்பட 58 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு சேர விருப்பமுள்ளவர்கள் நவ- 10ம் தேதி முதல் 30ஆம் தேதிவரை பெரம்ப லூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறலாம். இப்பணியில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், உடல் ஆரோக்கியத்துடனும் தேர்வு நடைபெறும் நாளில் 20 வயது நிரம்பியவர்களா கவும் 45வயது நிறைவடை யாதவராகவும், இந்தியக் குடி மகனாகவும் பெரம்ப லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வராகவும் இருக்கவேண்டும். உடற்தகுதியாக ஆண்க ளுக்கு உயரம் 167 செ.மீட்ட ரும்,.மார்புஅளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும் விரிந்த நிலையில் 86 செ. மீட்டரும் இருக்கவேண்டும்.

பெண்களுக்கு உயரம் 157 செ.மீட்டர் இருத்தல் வேண் டும். அரசியல் கட்சியில் தொடர்பில்லாதவராக, குற் றப் பின்னணி இல்லாதவ ராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று (7ம் தேதி) காலை 7:30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஊர்காவல் படை வீரர்களுக்கான பதிவி இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் பெரம் பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் தலைமையில், ஊர்க்காவல் படை மண்டல துணைத் தளபதி சித்ரா முன்னிலையில் நடைபெற் றது. இந்தத் தேர்வினை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் காலி பணியிடங்க ளுக்கு விண்ணப்பித்த 89 ஆண்கள், 21பெண்கள் என மொத்தம் 110பேர்களில், 65 ஆண்கள், 15 பெண்கள் என மொத்தம் 80 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் ஆண்களுக்கு உயரம், மார் பளவு, குறித்த நேரத்தில் 1500மீட்டர்ஓட்டத்தை கடந்து செல்வது,நீளம்தாண்டுதல் உள்ளிட்ட அடிப்படையிலும், பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டத்தைக் குறித்த நேரத்தில் கடந்துசெல்வது, உயரம் தண்டுதல் உள்ளிட்ட அடிப்படையிலும்,தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் 50 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வுக்கு 30 பேர் வருகை தரவில்லை. இந்த தேர்வுப் பணிகளை ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், எழுத்தர் சரவணன் ஆகியோர் செய்துஇருந்தனர் தேர்ந் தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை கவாத்துபயிற்சி வழங்கப்பட உள்ளது.

The post ஊர்காவல்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Home Guard Recruitment Camp ,Perambalur ,SP ,Perambalur District ,Home Guard ,Dinakaran ,
× RELATED வெப்பத்தின் தாக்கம் எதிரொலி: எஸ்பி...