×

விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா பேட்டி

சென்னை: சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
பால், மின்சாரம் இல்லாமல் ஒட்டுமொத்த சென்னையே பாதித்துள்ளது. 10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்து இருந்தால் சென்னையின் நிலைமை என்னவாகி இருக்கும். மக்கள் தொடர்ந்து சிரமப்பட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டுமா?. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது. ஓரிரு நாளில் நல்ல செய்தி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,DMD ,Treasurer ,Premalatha ,Kodambakkam Rangarajapuram ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி...