×

தேவாலாவில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பாதிப்பு

 

பந்தலூர், டிச.8: பந்தலூர் அருகே தேவாலா பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொது சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 17ம் வார்டு தேவாலா பஜார் பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி முன்புறம் முதல் தேவாலா பஜார் ஆட்டோ ஸ்டாண்ட் வரை உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகின்றது.

இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்றுகள் பரவும் நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாயில் தேங்கி இருக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவாலாவில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Dewala ,Bandalur ,Dewala Bazar ,
× RELATED தேவாலா பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம்