×

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 மாஜி கடற்படையினருடன் இந்திய தூதர் சந்திப்பு

புதுடெல்லி: கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கடந்த 3ம் தேதி இந்திய தூதர் சந்தித்ததாக வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தார் நாட்டில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் , கத்தார் உளவுத்துறை 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த அக்டோபரில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது ஒன்றிய அரசோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில்,வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக் ஷி நேற்று கூறுகையில்,‘‘மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டில் ஏற்கனவே இரண்டு முறை விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் அளித்து வருகிறோம். கடந்த 3ம் தேதி அன்று சிறையில் இருக்கும் எட்டு பேரையும் இந்திய தூதர் சந்தித்தார்’’ என்றார்.

The post கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 மாஜி கடற்படையினருடன் இந்திய தூதர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Qatar ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...