×

காதலித்து ஏமாற்றியதால் துணை நடிகை தற்கொலை வழக்கில்புஷ்பா பட நடிகர் அதிரடி கைது

ஐதராபாத்: புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் நண்பராக நடித்த ஜெகதீஷ், பெண் ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த படம் “புஷ்பா-தி ரைஸ்”. முதல் பாகமான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில் வர்மா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் நண்பராக ஜெகதீஷ் என்பவர் நடித்திருந்தார். ‘மல்லேசம்,’ ‘ஜார்ஜ் ரெட்டி,’ மற்றும் ‘பலாசா 1978’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு புஷ்பா படம் திருப்பு முனையாக அமைந்திருந்தது.

இதனிடையே ஜெகதீஷ், துணை நடிகை ஒருவரின் தற்கொலைக்கு காரணமாகியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ‘ஜெகதீஷ் சம்பந்தப்பட்ட அந்த துணை நடிகையுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். ஜெகதீஷும் அந்த பெண்ணும் குறும்படங்களில் பணியாற்றியபோது நண்பர்களாகி விட்டனர். அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் காரணமாக அவருக்கு ஜெகதீஷுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறிது காலம் உறவில் இருந்த அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதற்கிடையில் ஜெகதீஷ், அந்த பெண்ணுக்கு அந்தரங்க படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்த கொடுமையால் மனமுடைந்த அவர் கடந்த 29ம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், பஞ்சகுட்டா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், வழக்கு தற்கொலைக்கு தூண்டுதலாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெகதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

The post காதலித்து ஏமாற்றியதால் துணை நடிகை தற்கொலை வழக்கில்புஷ்பா பட நடிகர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Jagdish ,Allu Arjun ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...