×

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 3வது நாளாக இன்றும் விடுமுறை: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு


கூடுவாஞ்சேரி: மிக்ஜாம் புயலால் நாசமடைந்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தொடர்ந்து 3வது நாளாக இன்றும் விடுமுறை விடப்படுகிறது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக் காண தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் தொடர் கன மழை பெய்தது.

அப்போது, மிக்ஜாம் புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஏராளமான மரங்களை சூறையாடியது. அது மட்டுமல்லாமல் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள 4 இடங்களில் பூங்காவின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினமும், நேற்றும் பூங்கா மூடப்பட்டது. மேலும், பூங்காவில் பராமரிப்பு பணி இன்னும் நிறைவடையாததால் இன்றும் பூங்கா மூடப்படுகிறது என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 3வது நாளாக இன்றும் விடுமுறை: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Kuduvanchery ,Cyclone Mikjam ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...