×

உயிரிழப்பை தடுக்கவே சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயிரிழப்புகளை தடுக்கவும் தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயல் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

The post உயிரிழப்பை தடுக்கவே சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chennai ,Tamil ,Nadu ,PM ,M. K. Stalin ,
× RELATED அனைவரும் ஓரணியில் உழைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்