×

மிசோரம் மாநிலத்தில் லால்துஹோமா நாளை முதல்வராக பதவியேற்பு: ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார்

அய்சால்: மிசோரம் மாநில புதிய முதல்வராக சோரம் மக்கள் இயக்க தலைவர் லால்துஹோமா நாளை பதவியேற்கிறார். மிசோரமில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சோரம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்) மொத்தமுள்ள 40 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக இருந்த மிசோ தேசிய முன்னணி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பாஜ 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான லால்துஹோமா, நேற்று முன்தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி னார். இந்நிலையில், லால்துஹோமா நேற்று அம்மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டியை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை அவர் புதிய முதல்வராக பொறுப்பேற்கிறார்.

The post மிசோரம் மாநிலத்தில் லால்துஹோமா நாளை முதல்வராக பதவியேற்பு: ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் appeared first on Dinakaran.

Tags : Lalthuhoma ,Mizoram ,AIZAL ,SORAM ,PRIME ,MINISTER ,STATE OF ,MISORAM ,Dinakaran ,
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி