×

வெளியே தெரிந்தோ, தெரியாமலோ…தினமும் 4,320 குழந்தை திருமணங்கள் நடக்குது!: தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் பகீர்

புதுடெல்லி: நாடு முழுவதும் தினமும் 4,320 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரியவந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் குறிப்பிட்ட கால இடைவெளியில், நாடு முழுவதும் நடைபெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில், ‘கடந்த 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2021ம் ஆண்டில் 1,050 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2022ம் ஆண்டில் 1,002 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 4,320 குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.

ஆனால் இவற்றில் மூன்று புகார்கள் மட்டுமே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். அதாவது, நாட்டில் நிமிடத்திற்கு மூன்று குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.

குழந்தை திருமணத்தின் அடிப்படை உண்மைக்கும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) இன் படி, இந்தியாவில் தற்போதைய குழந்தை திருமண விகிதம் 23.5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் 257 மாவட்டங்களில் குழந்தை திருமண விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

The post வெளியே தெரிந்தோ, தெரியாமலோ…தினமும் 4,320 குழந்தை திருமணங்கள் நடக்குது!: தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் பகீர் appeared first on Dinakaran.

Tags : National Crime Archives ,Bhagir ,New Delhi ,
× RELATED ஜாதி, மத அடிப்படையில் கைதிகளை பிரிக்க...