×

பணம் பெற்று பதவி; பாஜ தலைவர்களை நீக்க கோரி போஸ்டர்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பல இடங்களில் பாஜ தலைவர்களை கட்சியிலிருந்து நீக்ககோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, கடலூர் மேற்கு மாவட்டத்தின் கட்சி வளர்ச்சியை சீர்குலைத்த மாவட்ட தலைவர் மருதையை உடனே மாற்று.

தகுதியற்ற நபரை பணம் பெற்றுக் கொண்டு மாவட்ட தலைவராக்கிய, மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இருவரையும், பதவி நீக்கம் செய். இப்படிக்கு கட்சி வளர்ச்சியை உயிரென கொண்ட முன்னாள் நிர்வாகிகள், கடலூர் மேற்கு மாவட்டம், பாரதிய ஜனதா கட்சி என ஒட்டப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பணம் பெற்று பதவி; பாஜ தலைவர்களை நீக்க கோரி போஸ்டர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Chidambaram ,Cuddalore district ,
× RELATED என் சொந்த தொகுதியான...