×

அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட்

சென்னை: அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M.K.Stalin… ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை...